Bank of Ceylon

அரச ஓய்வூதியம் பெறுவோருக்கான கடன் வசதி

தகைமையுடைய கடன் பெறுநர்கள்:

  • அரச ஓய்வூதியம் பெறும் 67 வயதுக்கு குறைந்தவர்கள்
  • மாதாந்தம் ஓய்வூதிய கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் கிளையிலிருந்து கடன் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
  • இந்த திட்டத்தின் கீழ் இணைந்த முறையில் விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

நோக்கம்:

  • வீடு பழுதுபார்ப்பு
  • மருத்துவ செலவீனங்களை ஈடுசெய்ய
  • பிள்ளைகளின் கல்விச் செலவீனங்களை ஈடுசெய்ய
  • ஏனைய எந்தவொரு சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தேவைகள் (ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு)

கடன் தொகை:

  • 60 வயதுக்கு குறைந்தவர்களாயின், ஆகக்கூடியது ரூ. 500,000 வரை.
  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களாயின், ஆகக்கூடியது ரூ. 300,000 வரை.

வட்டி வீதம்:

  • 14.75% வ.வ மாறுபடும் (அரையாண்டிற்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும்)

மீளச் செலுத்துவது:

  • முழுமையாக மீளச் செலுத்துவதற்குரிய காலம் ஆகக்கூடியது 5 வருடங்கள், விண்ணப்பதாரி 70 வயதை பூர்த்தி செய்வதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

பிணை:

  • மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கும் பிரதேச செயலாளரிடமிருந்து மாதாந்த ஓய்வூதியத் தொகையை வஙகிக் கணக்குக்கு செலுத்துவதை உறுதிப்படுத்தும் கடிதம்
  • ஸ்ரீ லங்கா இன்ஷுவரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தினால் வழங்கப்படும் குறைந்து செல்லும் தவணை காப்புறுதி திட்டம்

நிபந்தனைகளுக்கு உட்படும்

(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,
நுகர்வோர் கடன் பிரிவு,
20ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொ.பேசி: 011 220 4522 / 011 220 4563 / 011220 4558,
மின்னஞ்சல்: 011 2338762