Bank of Ceylon
Responsive image

BOC Paymate

BOC Paymate மூலமாக BOC வாடிக்கையாளர்களுக்கு தமது கட்டணப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை தமது கையடக்க தொலைபேசிகளினூடாக வீட்டிலிருந்தவாறோ, அலுவலகத்திலிருந்தவாறோ அல்லது எந்தவொரு பகுதியிலிருந்தும் மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடுப்பனவு நிலையங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. இதே மாதிரியான சௌகர்யம் மற்றும் வசதிகள் கணக்கு மீதிப் பரிசோதனை மற்றும் நபர்களுக்கிடையிலான பணமாற்றல்கள் போன்றவற்றுக்கும் வழங்கப்பட்டுள்ளன. BOC Paymate மூலம் உங்கள் கைகளில் காணப்படும் கையடக்க தொலைபேசி, 24 மணி நேரமும் மிகவும் பயனுள்ள சாதனமாக திகழும்.
 

SMS ஊடாக உங்கள் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்வது மிகவும் சுலபமானது
அருகிலுள்ள BOC கிளையின் மூலம் BOC Paymate சேவைக்கு பதிவு செய்து உங்கள் PIN இலக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்

SMS ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள ஆரம்பிக்கவும்


உங்களுக்கு கிடைக்கும் வசதிகள்

  • கணக்கு மீதி பரிசோதனை
  • குறுகிய கணக்கு அறிக்கை
  • நபர்களுக்கிடையிலான பண மாற்றங்கள்
  • கடன் அட்டை கட்டணம் செலுத்தல்
  • ஸ்ரீ லங்கா ரெலிகொம் கட்டணப்பட்டியல் செலுத்தல்
  • எயார்டெல் பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியல் கொடுப்பனவு/ரீலோட்
  • டயலொக் பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியல் கொடுப்பனவு/ரீலோட்
  • டயலொக் தொலைக்காட்சி கட்டணப்பட்டியல் கொடுப்பனவு
  • டயலொக் CDMA பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியல் கொடுப்பனவு
  • மொபிடெல் பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியல் கொடுப்பனவு/ரீலோட்
  • எடிசலாட் பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியல் கொடுப்பனவு/ரீலோட்
  • லங்காபெல் பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியல் செலுத்தல்
  • யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி தவணைக்கட்டணங்கள்
  • இலங்கை மின்சார சபை கட்டணப்பட்டியல் கொடுப்பனவு
  • தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கட்டணப்பட்டியல் கொடுப்பனவு

கொடுப்பனவுக்கான கட்டணங்கள்

கட்டணப்பட்டியல் கொடுப்பனவு / ரீலோட் ரூ. 15.00
கணக்கு மீதி விசாரணை ரூ. 2.00
குறுகிய அறிக்கை ரூ. 5.00
கடன் அட்டை கொடுப்பனவு ரூ. 5.00
நபர்களுக்கிடையிலான பண மாற்றம் ரூ. 0.5%
எயார்டெல் கட்டணம் செலுத்தல் - இலவசம்

*நிபந்தனைகளுக்கு உட்படும்

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.
விசாரணைகள்: 0112204652, மின்னஞ்சல்: mobilebanking@boc.lk தொ.நகல்: 0112447569

இலத்திரனியல் வங்கிச் சேவைகள் பிரிவு,
21ஆம் மாடி, தலைமை அலுவலகம்,
இலங்கை வங்கி,
கொழும்பு 01
தொ: 011 220 4654, 011 220 4659