Bank of Ceylon
Responsive image

 

BOC அபிமான ஓய்வூதிய திட்டம்

உங்கள் முதலீட்டு அமைப்பினை ஒழுங்கமைத்துக் கொள்ளக்கூடிய வகையிலமைந்த ஓய்வூதியத் திட்டமான அபிமான ஓய்வூதிய திட்டத்தை இலங்கை வங்கி அறிமுகம் செய்துள்ளது. எனவே உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக அமைந்துள்ளது எனும் தெளிவுடன் உங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், முழுமையாகவும் அனுபவித்து வாழலாம்.

எனக்கு ஏன் ஓய்வூதியத் திட்டமொன்று அவசியம்?

 

  • ஓய்வு வாழ்க்கையை நிதி நெருக்கடிகள் எதுவுமின்றி சுகமாக வாழ்வதற்கு.
  • மாதாந்த செலவீனங்களுக்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்கு.
  • உறுதி செய்யப்பட்ட மாதாந்த அனுகூலமொன்றை பெற்றுக் கொள்வதற்கு.

 

ஏன் இலங்கை வங்கியிடமிருந்து?

 

  • இலங்கையில் காணப்படும் மாபெரும் வணிக வங்கியாக திகழ்கிறது.
  • 100 வீதம் அரச உரிமையாண்மையின் கீழ் இயங்கும் வங்கி
  • நிதி உறுதித்தன்மை

தகைமை பெறுவோர் யார்?

  • 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும்.
  • தனியார் துறை ஊழியர்கள்
  • பகுதி அரசாங்க ஊழியர்கள்
  • (அரச கூட்டுத்தாபனங்கள் / சபைகள் / அதிகாரசபைகள்)
  • சுய தொழில்புரிவோர்
  • இலங்கையில் வதியாத இலங்கையர்கள் (இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு அல்ல)
  • ஓய்வு பெற்றவர்கள் (ஊழியர் சேமலாப நிதியத் தொகை அல்லது சேமிப்புத் தொகையை மொத்தமாக செலுத்துவதன் மூலம்)
  • தனியார் துறை தொழில் வழங்குநர்கள் (அவர்களின் ஊழியர்களுக்கு இணைந்த பங்களிப்புகள் மூலமாக)


    “BOC அபிமான' உடன் ஏன் இணைந்து கொள்ள வேண்டும்
  • உயர்ந்த அனுகூலங்கள்
  • சந்தையில் காணப்படும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத்திட்டமாக அமைந்துள்ளமை.
  • பாதுகாப்பான நீண்ட கால அனுகூலங்கள் மற்றும் ஆயுள்கால அனுகூலங்கள்

ஓய்வூதிய திட்ட தெரிவுகள் என்ன?

ஓய்வூதிய திட்ட தெரிவு

ஓய்வூதிய அனுகூலம் ஆரம்பிக்கும் (வயது)

ஓய்வூதிய அனுகூல காலம்

1

வருடம் 55

10 வருடங்கள் (120 தவணைகள்)

2

வருடம் 55

15 வருடம் (180 தவணைகள் )

3

வருடம் 60

10 வருடம் (120 தவணைகள் )

4

வருடம் 60

15 வருடம் (180 தவணைகள் )

5

வருடம் 55

ஆயுள் காலம்

6

வருடம் 60

ஆயுள் காலம்

7

55 வருடங்கள் அல்லது அதற்கு மேல்

அடுத்த மாதம் முதல் 10 வருடங்களுக்கு (120 தவணைகள்)

8

55 வருடங்கள் அல்லது அதற்கு மேல்

அடுத்த மாதம் முதல் 15 வருடங்களுக்கு (180 தவணைகள்)

9

55 வருடங்கள் அல்லது அதற்கு மேல்

அடுத்த மாதம் முதல் ஆயுட் காலம் வரை

ஓய்வூதிய அனுகூலத் தொகை

  • ரூ. 10000 இலான எந்தவொரு தொகையும்.

இந்தத் திட்டத்துடன் எவ்வாறு இணைந்து கொள்ள முடியும்?

  • நாடு முழுவதிலும் காணப்படும் எந்தவொரு இலங்கை வங்கிக் கிளையிலிருந்தும் இணைந்து கொள்ளலாம்.

எவ்வாறு ஓய்வூதிய அனுகூலத்தை பெற்றுக் கொள்ளலாம்?

  • மாதாந்த ஓய்வூதிய அனுகூலங்கள் சேமிப்புக் கணக்குக்கு மாற்றம் செய்யப்படும் அதனை எந்தவொரு இலங்கை வங்கி கிளையிலிருந்தும் அல்லது ATM இலிருந்தும் மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

பங்களிப்பு செய்யும் காலம் எவ்வளவு?

  • தவணைக்கட்டண தெரிவுகளுக்கு, மாதாந்த தவணைக்கட்டணம் என்பது வயது, தெரிவு செய்யப்படும் ஓய்வூதிய திட்டத்தெரிவு மற்றும் ஓய்வூதிய அனுகூலத் தொகை என்பதை பொறுத்து அமைந்திருக்கும். (வங்கி நிலையியல் கட்டளையை ஏற்பாடு செய்து கொள்ள முடியும்)
  • திட்டத்துடன் இணைந்து கொள்ளும் போது முழுத் தொகையாக முதலீடு செய்தும் ஆரம்பிக்கலாம்.

மாதாந்த தவணைக்கட்டணத்தை நான் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்?

  • நிலுவையிலுள்ள தொகையை வைப்புச் செய்வதன் மூலம் ஓய்வூதியத் திட்டத்தை செயற்படுத்த முடியும்.
  • தொடர்ச்சியான 12 மாதாந்த தவணைக் கட்டணங்களை செலுத்தத்தவறினால், ஓய்வூதியத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டு, நிலுவையிலுள்ள தொகை மீளளிக்கப்படும்.

நான் உயிரிழந்தால், வைப்புத் தொகைக்கு என்ன நடக்கும்?

  • உங்களால் பின்னுரித்துக்காக நியமிக்கப்பட்ட எந்தவொரு நபர் அல்லது எவரேனும் நியமிக்கப்படாத சந்தர்ப்பத்தில், சட்ட ரீதியான உரித்துடையவர்களுக்கு அனுகூலத்தொகை சென்றடையும். (தொகை மற்றும் கொடுப்பனவு கட்டமைப்பு ஆகியன வங்கியின் தீர்மானத்துக்கமைய இடம்பெறும்)

எனது மாதாந்த பங்களிப்புத் தொகைக்கு எனது நிறுவனம் பங்களிப்பு செய்யலாமா?

  • ஆம், நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்காக ஓய்வூதியத் திட்டங்களை ஏற்பாடு செய்யலாம், இணைந்த பங்களிப்புகள் அல்லது முழுமையாக நிறுவனத்தின் பங்களிப்பாக இவை அமைந்திருக்கலாம்

இந்த திட்டத்துக்கு எனது ஊழியர் சேமலாபத் தொகை முதலீடு செய்யப்படலாமா?

  • ஆம், நீங்கள் 55 வயதுக்கு மேற்பட்டவராயின், அடுத்த மாதத்திலிருந்து நீங்கள் ஓய்வூதிய அனுகூலத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

பங்களிப்பு வழங்கும் காலப்பகுதியில் இது இரத்துச் செய்யப்படலாமா?

  • ஆம், பின்வரும் சந்தர்ப்பங்களில்,

-         தன்னார்வ அடிப்படையில்

-         உயிரிழப்பு

-         தொடர்ச்சியான 12 மாதங்களுக்கு தவணைக்கட்டணங்களை செலுத்தாமல் இருப்பது.

*நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது).

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.

பிரதான முகாமையாளர்,
உற்பத்தி முகாமைத்துவ பிரிவு,
25ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி: (+94) 011 245 2056 / 011 220 5062 / 011 220 5006,
மின்னஞ்சல்::  cmpm@boc.lk