Bank of Ceylon
Responsive image

 

  BOC சேமிப்பு

 

நாடு முழுவதையும் சேர்ந்த இலங்கை வங்கிக் கிளைகளிலிருந்து BOC சேமிப்புக் கணக்கை 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் எவரும் ஆரம்பிக்கலாம்.

உள்ளம்சங்கள் / அனுகூலங்கள்:

கணக்கை இணைந்து ஆரம்பிக்க முடியும்

எந்நேரமும் பண மீளப்பெறுகை செய்வதற்கேற்ற ATM மற்றும் பற்று அட்டை

அரச வங்கியின் நம்பிக்கை மற்றும் உத்தரவாதம்

இணைய வங்கிச் சேவை மற்றும் குறுஞ்செய்தி வங்கிச் சேவை

கணக்கு மீதியில் 90 சதவீதம் வரை உடனடி கடனாக வழங்கப்படும்

நாடு முழுவதையும் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இலங்கை வங்கிக் கிளைகளில் வைப்புகளை மேற்கொள்ளலாம்.

24 மணிநேர அழைப்பு நிலைய வசதி

அவசர தேவைகளுக்காக 365நாட்கள்/24 மணி நேர வங்கிச் சேவைகளை வழங்கும் தலைமைக் காரியாலய கிளை

 

கணக்கை ஆரம்பிப்பதற்கு அவசியமான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை

முகவரியை உறுதி செய்யும் ஆவணம் (தேசிய அடையாள அட்டை முகவரியில் வசிக்காமல் இருந்தால்)

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலைய தொலைபேசி இலக்கமான 0112 204444 உடன் தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பத்தை தரவிறக்கம்
தரவிறக்கம் செய்ய அழுத்தவும்