Bank of Ceylon
Responsive image

BOC Prestige Plus நடைமுறைக் கணக்கு

BOC Prestige Plus பிரத்தியேக நடைமுறைக் கணக்கு இன்றைய உலகில், துறைசார் நிபுணர்கள் மற்றும் வேலைப்பளு நிறைந்த நிறைவேற்று அதிகாரிகளுக்காக, அவர்களின் வாழ்க்கை முறைக்குப் பொருத்தமான பல சௌகர்யமான உள்ளம்சங்களையும் அனுகூலங்களையும் வழங்கும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவைப்பாடுகள்

  • ஆரம்ப வைப்பு ரூ. 30,000/-

  • ஆகக்குறைந்த நிலுவைத் தேவைப்பாடு ரூ. 10,000/-

தகைமை

  • தொழில் புரிதல் அல்லது சுயதொழிலில் ஈடுபடும் தொழில்சார் நிபுணர்கள் (வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கட்டடக்கலை நிபுணர்கள், கணக்கியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்... போன்றோர்).

  • அல்லது, மதிப்பு மிக்க தனியார் அமைப்பு / கூட்டாண்மை நிறுவனமொன்றில் பணியாற்றும் நிறைவேற்று அதிகாரி அல்லது அரசாங்க அல்லது அரசுசார் நிறுவனமொன்றில் பணியாற்றும் அதிகாரி மாதாந்தம் ரூ. 40000க்கு மேற்பட்ட மொத்த வருமானத்தை பெறுவோராக இருத்தல்.

உங்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள்

  • விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான காசோலைப் புத்தகம்.

  • தினசரி ரூ. 100,000 வரை பணம் மீளப் பெறல் எல்லை மேம்படுத்தப்பட்ட VISA இலத்திரனியல் பற்று அட்டை.
     
  • இணைவுக்கட்டணமின்றி கிரெடிட் கார்ட்கள் வழங்கப்படுவதுடன், ரூ. 100,000/- வரை கடன் எல்லையும் கொண்டிருக்கும்.
  • BOC ட்ராவல்ஸ் (பிரைவட்) லிமிடெட்டில் விசேட விலையில் விமான டிக்கட்களை கொள்வனவு செய்து கொள்ளலாம்.

  • BOC இணைய வங்கிச் சேவை வசதி

  • Paymate ஊடாக SMS வங்கிச் சேவை வசதி

  • உங்கள் கனவு இல்லத்தை நிர்மாணித்துக் கொள்ள வீட்டுக் கடன்கள், சகல பிரத்தியேக தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ள பிரத்தியேகக்கடன்கள், வாகனங்களை கொள்வனவு செய்ய லீசிங் வசதிகள் என்பன மிகக்கவர்ச்சிகரமான விலைகளில்.

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை தொடர்பு கொள்ளுங்கள்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

 

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள
தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும்