Bank of Ceylon
Responsive image

BOC சிரிமெதுர 2 விஜயங்களில் வீட்டுக்கடன்

வாடிக்கையாளர்களுக்கு 2 விஜயங்களில், 2 வாரங்களினுள் வீட்டுக்கடன்களை வழங்கும் இலங்கை வங்கியின் சிரிமெதுர வீட்டுக்கடன் திட்டம்.

சிரிமெதுர வீட்டுக்கடன் திட்டங்களின் சிறப்பம்சங்கள்:

  • முதல் விஜயத்தின் போது விண்ணப்பிப்பு, இரண்டாம் விஜயத்தின் போது கடன் பெறல்.
  • உங்கள் கடனை பெற்றுக் கொள்வதற்கு ஆகக்கூடியது 15 நாட்கள்.
  • அவசியமான ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் பதிவுகளை மேற்கொள்ளவும் இலங்கை வங்கியிடமிருந்து உதவிகள்
  • கடன் வழங்கும் செயன்முறையின் போது SMS ஊடான அறிவித்தல்கள்.
  • ஒன்லைன் மூலமாக கடன் நிலை பற்றி இலகுவான முறையில் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • ரூ. 25 மில்லியன் வரையான கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • 25 வருடங்கள் வரையான கடன் மீளச் செலுத்தும் காலம்.

வாடிக்கையாளருக்கான ஏனைய அனுகூலங்கள்:

  • துரித சேவை
  • மிகக்குறைந்த சேவைக் கட்டணங்கள்
  • குறைந்த வட்டி வீதம்

தகைமை:

  • 18 – 60 வயதுக்குட்பட்ட இலங்கையர்கள்.
  • தொழில்சார் நிபுணர்கள் (அரசாங்க, அரசுசார் அல்லது தனியார் துறை)
  • நிலையான அல்லது தற்காலிகமான வருமானமீட்டும் தொழில்சார் நிபுணர்கள்
  • சுய தொழில் புரிவோர்
  • விவசாய துறையில் பருவகால வருமானமீட்டுவோர்.
  • விற்பனைக்காக வீடுகளை நிர்மாணிப்போர்

பிணை:

  • குறித்த சொத்தின் அடைமானம்

நிபந்தனைகளுக்கு உட்படும்

(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது).

மேலதிக விவரங்களுக்கு, 

அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,

நுகர்வோர் கடன் பிரிவு,
20ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொ.பேசி: 011 220 4522 / 011 220 4563 / 011 220 4564
மின்னஞ்சல்: 011 2338762