வைப்புகள்
கேட்பு வைப்புகள்
- ஆரம்ப வைப்பாக 5000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு நிகரான ஏனைய நாணயங்களின் தொகை ஆகியவற்றைக் கொண்டு கேட்பு வைப்பு கணக்கை ஆரம்பிக்க முடியும். காசோலைப்புத்தகங்கள் வழங்கப்படாமையால், எழுத்து மூல அறிவுறுத்தல்களுக்கமைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.
- கால வைப்புகள்
- ஆரம்ப வைப்பாக 5000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு நிகரான ஏனைய நாணயங்களின் தொகை ஆகியவற்றைக் கொண்டு கால வைப்பு கணக்கை ஆரம்பிக்க முடியும். வைப்புகளை 7 நாள் அழைப்பு, 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வரை மேற்கொள்ளலாம்.
- சர்வதேச சந்தைகளில் காணப்படும் சந்தைப் பெறுமதிகளுக்கமைய கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் கால வைப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும்.
உள்ளக, வெளிச்செல்லல் பண அனுப்புகைகள்
- வெளிச்செல்லல் பண அனுப்புகைகள் பணப்பரிமாற்றல் தேவைப்பாடுகைகள் இன்றி மேற்கொள்ளலாம்.
- நிதிவழங்கல் மற்றும் ஆலோசனை சேவைகள்
- வியாபார நிதி, நிதி மாற்றங்கள் மற்றும் கடன்கள் தொடர்பில் கடல்கடந்த வங்கிச் சேவைகள் பற்றிய ஆலோசனைகள் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளால் அவை வழங்கப்படும்.
- எவ்வாறு கடல் கடந்த வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்
- கடல் கடந்த வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பது என்பது மிகவும் இலகுவானது கடல்கடந்த வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் நியமமாக அமைந்துள்ளன.
நடைமுறைக்கணக்கு ஆரம்பிக்கப்படக்கூடியது,
- வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்,
- இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்
- தேவைப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில்
- தனிநபர்கள்
- ஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் (பணப்பரிமாற்றல் கட்டுப்பாட்டாளரின் அனுமதி பெற்ற நிறுவனங்கள்)
மேலதிக விவரங்களுக்கு அழைக்கவும்
சிரேஷ்ட முகாமையாளர் –
கணக்கியல் மற்றும் மேற்பார்வை
011-2346551
மின்னஞ்சல்: smosh@boc.lk