Bank of Ceylon

பிறநாட்டவர்களுக்கான வங்கிச் சேவை

1978 ஆம் ஆண்டு இலங்கை முதலீட்டு சபை சட்ட இல. 4 இன் 17(2) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. பின்வரும் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

  • பிறநாட்டவர்களுக்கான வங்கிச்சேவை வழங்கப்படுவது,
  • இலங்கை முதலீட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வியாபார ஸ்தாபனங்களுக்கு.
  • வதியாதோர் நிறுவனங்கள் / தனிநபர்கள்
  • வெளிநாட்டு நாணய வங்கி அலகுகள் / பணப்பரிமாற்றல் இல்லங்கள்
  • வதிவோர் / இலங்கை மத்திய வங்கியின் பணப்பரிமாற்றல் கட்டுப்பாட்டு திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்

பின்வரும் வெளிநாட்டு நாணயங்களில் வாடிக்கையாளர்கள் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான தகைமையை பெறுவார்கள்.

  • ஐக்கிய அமெரிக்க டொலர்கள்
  • ஸ்ரேளிங் பவுண்கள்
  • யூரோ
  • ஜப்பானிய யென்
  • அவுஸ்திரேலிய டொலர்கள்
  • சிங்கப்பூர் டொலர்கள்
  • கனேடிய டொலர்கள்
  • ஹொங்கொங் டொலர்கள்

வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள்

  • சாதாரண பணப்பரிமாற்றல் ஒழுங்குபடுத்தல்களிலிருந்து விடுபட்டது
  • ஏற்றுமதி வரி அனுகூலங்கள்
  • சுங்க வரியிலிருந்து விடுபட்டது
  • உள்நாட்டு நாணயத்துடன் ஒப்பிடுகையில், கடன் பெறுகைகளின் போது குறைந்த வட்டி வீதங்கள்
  • முதலீட்டாளரை நாணயபரிமாற்ற ஏற்றத்தாழ்வுகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

எமது சேவைகள்

  • கேட்பு, அழைப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளை ஏற்றல்
  • உள்ளக, வெளிச்செல்லல் பண அனுப்புகைகளை வாடிக்கையாளர் சார்பில் மேற்கொள்ளவும்
  • Nostro கணக்குகளை ஒத்திசையச் செய்தல்
  • கிளைகளின் NRFC/RFC அலகுகளின் நிதியை கட்டுப்படுத்தல்
  • முதலீட்டு மற்றும் நிதி முகாமைத்துவம்
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான நிதி உதவிகளை வழங்கல்
  • கடன் உத்தரவாதமளித்தல் மற்றும் அனுமதியளித்தல்
  • வியாபார தரவுகளை ஏற்பாடு செய்தல்
  • வெவ்வேறு மூலங்களின் ஊடாக நீண்ட கால அடிப்படையில் கடல்கடந்த சேவைகளை வழங்கல்
  • வெளிநாட்டு கிளைகளுக்கு மூலதனங்களை வழங்கல்
  • எமது வெளிநாட்டு கிளைகளுக்கு நேரடி பண வழங்குதல்கள்