Bank of Ceylon

கடன் வசதிகள்

 
வியாபார நிதி வசதிகள் (சரக்கேற்றலுக்கு முன்னர் மற்றும் பின்னர்)
 

பின்வரும் தொழிற்படும் மூலதன தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வசதிகள் வழங்கப்படும்.

  • நாணயத்தாள் வசதி
  • கட்டணப் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளல் வசதி
  • அடைமானக் கடன் வசதி
  • இறக்குமதி கட்டணப் பட்டியல்களை செலுத்தித் தீர்ப்பதற்கான கடன் தொடர்கள்
 
நீண்ட கால வசதிகள்
 
தவணைக் கடன்கள்
 

நிறுவனசார் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள உதவும் வகையிலமைந்த நிதித் தீர்வாகும்.

  • புதிய செயற்திட்டங்கள், நீடிப்புகள் அல்லது மாற்றியமைத்தல்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் நிலையான செலவீனங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் தொழிற்படும் மூலதன ஏற்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகளை உகந்த தவணைகளிலும் மீளச் செலுத்தும் நிபந்தனைகளின் பிரகாரமும் பெற்றுக் கொள்ள முடியும். நிலையான செலவீனத்தில் காணிகள், சாதனங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு நிதி வழங்கல்கள் அடங்கும்.
  • கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன், நெகிழ்ச்சியான மாதாந்த, காலாண்டு, அரையாண்டு அடிப்படையிலான நிலையான தவணைக்கட்டணங்கள் அல்லது பலூன் அல்லது புல்லட் வகையான மீளக் கொடுப்பனவு நியதிகள் மற்றும் மேலதிக கட்டமைக்கப்பட்ட கடன் திட்டங்களும் காணப்படுகின்றன.
  • குறைந்து செல்லும் மீதி அல்லது சமமான தவணை அடிப்படையில் வட்டி அறவிடப்படுவது என்பது மீளச் செலுத்தல் ஏற்பாட்டை பேணுவதற்கான சிறந்த அங்கமாக அமைந்துள்ளது.
முறையான பிணை ஆவணங்கள் பரிசீலனை பூர்த்தி செய்யப்படும் வரையில், தற்காலிக கொடுப்பனவாக இணைப்பு நிதிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் சாதாரணமாக, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மீது அடைமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் இச்சேவை வழங்கப்படும்.
 
ஆட்சிக்குழு கடன்கள்
 
பாரிய செயற்திட்டங்களுக்கான கடன்களை சில வங்கிகள் இணைந்து வழங்கும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் ஒரு செயற்திட்டத்துக்கு நிதி உதவிகளை வழங்கும். சாதாரணமாக ஆட்சிக்குழு கடன்கள் என்பது, மொத்த கடன் தேவையை ஒரு வங்கியினால் ஈடுசெய்ய முடியாத பட்சத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.