
உள்நாட்டில் வெளிநாட்டு நாணய வைப்புகள்
உங்கள் ஏற்றுமதி வருமானங்களை, வெளிநாட்டு நாணயத்தில், உள்நாட்டு வெளிநாட்டு நாணய கணக்கில் (DFC) வைப்புச் செய்யலாம்.
சுற்றுலா ஹோட்டல்கள், கப்பல் சரக்கேற்றல், விமான சேவை மற்றும் பயண முகவர்கள் மற்றும் வெளிநாடுகளில் நிர்மாண திட்டங்களை பொறுப்பேற்றுள்ள உள்நாட்டு நிர்மாணத்துறை நிறுவனங்கள் போன்றன பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வோர், DFC கணக்கொன்றை ஆரம்பிக்கலாம்.
வைப்பாளர் கோரும் பட்சத்தில், DFC கணக்கிலிருக்கும் மீதியை ரூபாயில் மாற்றம் செய்து கொள்ளலாம்.