சுபீட்சக்கடன் திட்டம் ”சௌபாக்யா”
நோக்கம்
- விவசாய, கால்நடை மற்றும் மீன்பிடி தவிர்ந்த ஏனைய துறைகளைச் சேர்ந்த நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவு வியாபாரங்களுக்கு (MSMEs) கடன் வசதிகளை வழங்குவது.
- சிறிய மற்றும் நடுத்தர நிர்மாண துறை தவிர (தரம் C5 முதல் C11) வரை நிர்மாணத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பிக்கலாம்.
தகைமை
- இலங்கை பிரஜையாக இருத்தல்
- பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல்
- முன்னர் பெற்றுக் கொண்ட கடன்கள் அனைத்தையும் முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும்
- மதிப்பிடப்பட்ட செயற்திட்ட பெறுமதியில் ஆகக்குறைந்தது 25% உரிமையாண்மை பங்களிப்பை வழங்கக்கூடியவராக இருத்தல்
- நேர்த்தியான பணப்பாய்ச்சல் மற்றும் போதியளவு மீளச்செலுத்தல் திறன் போன்றவற்றை வங்கிக்கு திருப்தியளிக்கக்கூடிய வகையில் கொண்டிருத்தல்
- வங்கிக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கக்கூடியவராக இருத்தல்.
வட்டி வீதம்
- கடன் தொகையை பொறுத்து போதியளவு பிணைகளை கவனத்தில் கொண்டு.
- சொத்தின் அடைமானம் (75% FSV)
- தீ, திருட்டு காப்புறுதி வங்கியின் சார்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.
கடன் தொகை
- செயற்திட்டத்தின் அளவு / பிரிவு கவனத்தில் கொள்ளப்பட்டு – ஆகக்கூடியது ரூ. 25 மில்லியன்.
- நிர்மாணத்துறைக்கு ஆகக்கூடியது ரூ. 5.0 மில்லியன்
மீளச்செலுத்தும் காலம்
- 60 மாதங்கள் வரை (6 மாதங்கள் சலுகைக்காலம் அடங்கலாக)
செயற்படும் பிரசேதங்கள்
- நாடு முழுவதும்
* நிபந்தனைகளுக்கு உட்படும்
(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)
மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.
முகாமையாளர்,
அபிவிருத்தி வங்கியியல் பிரிவு
25ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொ.பேசி:
ஃபக்ஸ்: